Designed by Iniyas LTD
சம்பந்தன்- விக்னேஸ்வரன் விரைவில் நேரில் சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், விரைவில் நேரில் சந்தித்துப் பேச எதிர்பார்த்திருப்பதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக கலந்துரையாடவும். ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவும், இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸவரனும் இந்த வாரம் சந்தித்துப் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்றுடன் இரா. சம்பந்தன், ஐந்து நாள் பயணமாக ஜேர்மனி சென்றுள்ளார்.
அவர் நாடு திரும்பியதும், இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.