Designed by Iniyas LTD
சம்பியன்ஸ் லீக் தொடரில் மும்பை, டிஸ்டிரிக்ட்ஸ் அணிகள் மோதுகின்றன
சம்பியன்ஸ் லீக் தொடர் தகுதிச்சுற்றின் இன்றைய இறுதிப் போட்டியில் மும்பை, டிஸ்டிரிக்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் மும்பை அணி வெற்றி பெறும் பட்சத்தில், பிரதான சுற்றுக்கு முன்னேறலாம். இதைத் தொடர்ந்து 6வது சம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நாளை ஆரம்பமாகிறது.
இந்த தொடரில் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள அடுத்த இரு இடங்களுக்கான நான்கு அணிகள் தகுதிச்சுற்றில் பங்கேற்றுள்ளன. இதுவரை இரண்டு சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், இன்னும் எந்த அணியும் தனது இடத்தை உறுதி செய்யவில்லை.இன்று நடக்கும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் மும்பை, நியூசிலாந்தின் நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை சந்திக்கிறது.
மும்பை அணி முதல் போட்டியில் லாகூரிடம் வீழ்ந்தது. அடுத்து இலங்கை எக்ஸ்பிரஸ் அணியை வீழ்த்தியது. இன்று வெற்றி பெறும் பட்சத்தில் பிரதான சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விடலாம். நியூசிலாந்தின் நார்த்தர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி, முதல் இரு போட்டிகளில் எக்ஸ்பிரஸ், லாகூர் அணிகளை வென்றது. அணித்தலைவர் பிளைன், வில்லியம்சன், வாட்லிங், ஹாரிஸ் துடுப்பாட்டத்தில் அசத்துகின்றனர். பந்துவீச்சில் டிம் சவுத்தி, பவுல்ட், ஸ்டைரிஸ், இஷ் சோதி என, சர்வதேச அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது இந்த அணிக்கு கூடுதல் பலம்.