Designed by Iniyas LTD
சயீத் அஜ்மலுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆதரவளித்துள்ளார்.
பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலின் முறையில்லாத பந்து வீச்சால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை விதித்தது. பல்வேறு தரப்பினரும் ஐ.சி.சி-யின் நடவடிக்கை சரியானதே என்று கூறும் நிலையில் முத்தையா முரளிதரன் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தடைவிதிக்கப்பட்ட அஜ்மல் பற்றி கூறுகையில், இப்போது உள்ள நிலை கடினமான ஒன்றாக இருக்கும். இந்த சமயத்தில் தான் தடைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மனதளவில் வலிமையாக இருந்தால் தான் மீண்டும் வர முடியும். இதே போன்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்ட போது நான் அவரின் மனநிலையில் தான் இருந்தேன்.
அவர் தனது கைகளை 15 டிகிரிக்கு குறைவாக மாற்றி, பந்து வீசி தன்னை நிரூபிக்கும் போது அவரால் மறுபடியும் சாதிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரன், அஜ்மலுக்கு முன்னரே இதே போல் பிரச்சனையில் சிக்கியவர். 2004 ஆம் ஆண்டு இவருடைய பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பானது என தடைவிதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.