Designed by Iniyas LTD
சரத் வீரவன்ஸ வீட்டில் கோப்புக்கள் அழிப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சரத் வீரவன்ஸவுக்கு சொந்தமான பத்தரமுல்லை தியவன்ன பூங்கா பகுதியில் அமைந்துள்ள வீட்டில் நேற்றிரவு பெரும் தொகை ஆவணங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் வீரவன்ஸ வகித்த வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சில் நேற்று மதியம் முதல் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களில் பெட்டிகளில் நிரப்பட்ட கோப்புகள் சரத் வீரவன்ஸவின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட கோப்புகளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளன.
இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் முதல் கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
உயர்கல்விஅமைச்சிலும்ஆவணங்கள்எரிக்கப்பட்டன!
உயர்கல்வி அமைச்சில் பெருமளவிலான ஆவணங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. என்ன எரியூட்டப்படுகிறது என அதில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதிலை வழங்கவில்லை. அமைச்சின் வளாகத்தில் நேற்றைய தினம் இந்த ஆவணங்கள் எரியூட்டப்பட்டன.
நேற்று சனிக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தில் எஸ்.பி. திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தார்.