Designed by Iniyas LTD
சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி
சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுத்துங்கள். பொலிவான தோற்றத்தை பெறலாம்.
மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை :
01.பச்சைப் பயிறு – 250 கிராம்,
02.கடலை பருப்பு 250 கிராம்,
03.கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்,
04.பூலாங்கிழங்கு 250 கிராம்
05.ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம்
ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி வரவும். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்