Designed by Iniyas LTD
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பந்து வீச அனுமதி!
சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளை மீறி பந்து வீசுவதாக தடை விதிக்கப்பட்ட தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்ஹைசோ பந்து வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க உள்ளூர் போட்டியில் பங்கேற்றிருந்த ஆரோனின் பந்து வீச்சு சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளை மீறியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டது. அதனையடுத்து பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆரோனிற்கு உள்ளூர் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தென் ஆபிரிக்க கிரிக்கட் சபை தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் பந்து வீச்சு பரிசோதனையை மேற்கொண்ட ஆரோனின் பந்து வீச்சு விதிமுறைகளுக்கு அமைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரோன் பாங்ஹைசோ உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.