Designed by Iniyas LTD
சர்வதேச சைக்கிள் பந்தயம்: இந்தியாவின் தெபோரா தங்கம் உள்பட 5 பதக்கங்கள் வென்று சாதனை
தைவானில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை தெபோரா (DEBORAH) தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார்.
20 வயது வீராங்கனையான தெபோரா பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றார்.
இந்தியாவை சேர்ந்த சைக்கிள் பந்தய போட்டியாளர் ஒருவர், சர்வதேச அளவிலான தொடர் ஓன்றில் 5 பதக்கங்களை வெல்வது இதுவே முதன்முறையாகும். அந்தமான் நிகோபர் தீவுகளை சேர்ந்த தெபோரா, 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தப்பி பிழைத்தவர்.