தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச நீதிபதிகள் விசாரனைக்கு அவசியம் தேவை!

 sarath-fonseka_0யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பாக சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளு­டைய பங்­க­ளிப்­புடன் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நேற்­றைய தினம் பத­வி­யேற்ற சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்ற வளா­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­வெளி­யி­டும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்;

முதலில் எனக்கு மீண்டும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்­றுத்­தந்த அனை­வ­ருக்கும் எனது நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

தேசிய அர­சாங்­கத்தின் நல்­லாட்­சியை சீர்­கு­லைப்­ப­தற்கு குழு­வொன்று முயற்­சித்து வரு­கின்­றது. அதற்­காக பல சதி முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அச்­சதி முயற்­சி­களை தோற்­க­டித்து நல்­லாட்­சியைப் பாது­காப்­ப­தற்கு முழுப் பங்­க­ளிப்­புடன் அர்ப்­ப­ணிப்­பாகச் செயற்­ப­டுவேன்.

எனக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்­க­வுள்­ள­தாக பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அது­தொ­டர்­பி­லான கருத்­துக்­களை வெளியிட்­டுள்­ளனர். அவ்­வா­றா­ன­தொரு பதவி கிடைக்கும் பட்­சத்தில் அத­னூ­டாக பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­சே­வையைத் தொடர்வேன்.

யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களின் போது சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளி­னது பங்­க­ளிப்பும், ஆலோ­ச­னை­களும் அவ­சி­மா­னது. தற்­போது இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களும், சந்­தே­கங்­களும் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு வெளிப்ப­டை­யான விசா­ர­ணைகள் அவ­சியம். எனவே, இறு­திக்­கட்டப் போரின்­போது இரா­ணு­வத்­தி­ன­ருக்குக் கட்­டளை பிறப்­பித்­தவன் என்ற வகையில் அந்த இரா­ணு­வத்­தி­னரை இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து மட்­டு­மல்­லாது அவர்­க­ளு­டைய கௌர­வத்­தையும் காப்­பாற்ற வேண்­டிய பாரிய கடமை எனக்கு உள்­ளது.

யுத்­தக்­குற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போது சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளு­டைய பங்­க­ளிப்­பு­டனும், ஆலோ­ச­னை­க­ளு­டனும் நடை­பெற்றால் அது நம்­ப­கத்­தன்மை வாய்ந்­தாக அமையும். இதுவே எனது நிலைப்­பா­டாகும். அதற்­காக நான் முழு அளவில் பங்­க­ளிப்பை வழங்­க­வுள்ளேன்.

கடந்த 2010ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 8 ஆம் திகதி என்னை சிறை­யிலே அடைத்­தார்கள். அதே மாதம் அதே திக­தியில் எனக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்கு சிபார்சு செய்த தகவல் வெளிவந்­துள்­ளது. மனதில் ஒன்றை வைத்­துக்­கொண்டு வேறொன்றை மைய­மாக வைத்து தேங்காய் உடைப்­பதால் எந்­தப்­ப­யனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

மிகப்­பெரும் கட்­சி­யொன்று காணப்­பட்­ட­போதும் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர் எவ்­வாறு புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்து மக்கள் ஆத­ரவைப் பெற­மு­டியும். அவ்­வாறு கட்­சி­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்டால் அது வெறும் நாட­க­மா­கு­மா­கவே அமையும். அவ்­வா­றான நாட­கங்­க­ளுக்கு மக்கள் ஒரு­போதும் ஏமா­ற­மாட்­டார்கள்.

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ­வுடன் எனக்கு எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை. இது ஜன­நா­யக நாடு என்­பதால் அவ­ர­வ­ருக்­கென்ற கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன.அவற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு பூரண உரிமை உண்டு. நான் பாரா­ளு­மன்ற உறுப்பினராக பத­வி­யேற்­றமை குறித்து அவ­ரு­டைய நிலைப்

­பாடு தொடர்பாக எந்தவிதமான கருத்துக்க ளையும் கூறமுடியாது. அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாலோ அல்லது தொடர்ந்தும் இருப்பதாலோ எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.

ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் நல்லாட்

சியை முன்னெடுத்து நாட்டின் எதிர் காலத்தை பாதுகாப்பதற்காக கடினமான பாதையில் பயணித்த அனைவரும் ஒன்றி ணைந்துள்ளார்கள். ஆகவே அதனை மைய

மாக வைத்துச் செயற்படுவோம். யாருக்கு

எதிராகவும் செயற்படவேண்டிய அவசிய மில்லை என்றார்.

Comments
Loading...