தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சற்று முன்னர் ஜனாதிபதி மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் மக்கள் வசிக்கின்ற சட்ட சிக்கல்கள் அற்ற இடங்களுக்கு எதிர்வரும் 3 மாதங்களுக்குள் காணி உறுதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்தே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தாம் மேற்கொண்டிருந்த மக்கள் சந்திப்பிற்கான பயணத்தின் போது பலரும் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுதான் காணி உரிமம் தொடர்பான பிரச்சினைகள்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு காணி உரிமங்களை பெற்றுக்கொடப்பது முதலாவது கடமையாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்

Comments
Loading...