Designed by Iniyas LTD
சவுதி அரேபியா: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலி
சவுதி அரேபியாவின் ஜிஜான் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட மிகப் பயங்கரமான தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் சவுதி ராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சவூதி சிவில் பாதுகாப்பு இயக்குனரகம், இந்த பயங்கரமான தீ விபத்து சவுதி நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நடந்தமைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் முதலாம் மாடியில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
மருத்துவமனையின் முதலாம் மாடியிலேயே தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு வார்டு ஆகியவை இருந்துள்ளன.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளது.