Designed by Iniyas LTD
சாகின்ற தேதிகள் பலவேளை மாறும்-இவர் சாவுகள் தமிழரின் சாதனையாகும்…!
வண்ணக் கனவுகள்
இவரிடம் இராது
வாலிபச் சேட்டைகள்
இவரிடம் வராது…!
எண்ணம் முழுவதும்
ஈழமென்றிருப்பார்
சாவரும்போதிலும் –அதை
வேதமென ஒலிப்பார்…!
தோள்களில் தாங்கிட
இவருடல் வராது-சோகம்
தீர்த்திடக்கூட கல்லறை இராது….!
சிலரிடம் இருக்கும்
இரகசியம் இவர்கள்
சிந்தித்துப்பார்த்தால்
அதிசயம் இவர்கள்…!
சாகின்ற தேதிகள்
பலவேளை மாறும்-இவர்
சாவுகள் தமிழரின்
சாதனையாகும்…!
போகின்றபோதிலும்
மலர்ந்திட்டபூவாய்
ஆவாரே இவர்களும்
கந்தகப்பூவாய்..!
இவர் விடுகின்ற மூச்சும்
பகைவனைச்சுடும்
இவர் மூசினால்
பகைவீட்டில்
சாவுகள் விழும்…!
தாயிற்குக்கூட
இவர் சாவு தெரியாது
தாயகம் கூட
இவர் பெயரை
அறியாது…!
நாகரீக வாழ்வு இவரிடம்
நாடாது-எந்த
நரித்தனம்கூட
இவரிடம் வேகாது…..!
திரையிட்டு வாழ்ந்திட்டு
சிதையிட்டுப்போவார்…
விதையிட்ட இவர் என்றும்
ஈழ மனங்களில் வாழ்வார்….!
மாவீரர் நினைவில்….
