Designed by Iniyas LTD
சாந்தபுரத்தில் கல்வி கற்காத நிலையில் 21 சிறுவர்கள்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் பாடசாலைக்குச் செல்லாத 21 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் ஆலோசனைக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் செயற்படுத்தலுக்கமைய கிளிநொச்சி ஸ்ரீ பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
சாந்தபுரம் மற்றும் அம்பாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த விடயத்தை அறிந்த மாவட்டச் செயலாளர், இது தொடர்பில் நீதவானுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதன்போது 18 சிறுவர்கள், 3 சிறுமிகள் உட்பட 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் சிறுவர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்