தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாமி 2 – விமர்சனம்…

சாமி படத்தின்  தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.
ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார்.

 

இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா  திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் – பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார்.
அதேநேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார்.
ராமசாமி என்னும் பெயரில் டெல்லியில் விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.
கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.
இதற்கிடையே  ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.

கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்’ டபுள் ட்ரீட்.
Comments
Loading...