தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதலை தாங்களே மேற்கொண்டதாக பொறுப்பேற்ற ஐ.எஸ்.அமைப்பு ..

அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதலை தாங்களே மேற்கொண்டதாக ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

சாய்ந்தமருது வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் (AMAQ ) வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், கல்முனை சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...