Designed by Iniyas LTD
சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால், காலிறுதியில் வெளியேறினார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் 6-ம் தரநிலையில் உள்ள சாய்னா நேவால், 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யுஹானை எதிர்கொண்டார். துவக்கத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். 
அதன்பின்னர் சாய்னாவுக்கு கடும் சவால் அளித்த வாங், 21-9, 21-7 என அடுத்தடுத்து இரண்டு செட்களையும் கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பருபள்ளி காஷ்யப், மலேசிய வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த், தென் கொரிய வீரரிடம் போராடி தோல்வியடைந்தார். முன்னணி வீரர்கள் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.