தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிக்கலுக்குள்ளாகியுள்ள அவுஸ்த்ரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம்!

donald-trump-450x282கடந்த நவம்பர் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்தார். அதன்படி படகு வழியே ஆஸ்திரேலியா வர முயற்சித்து அந்நாட்டின்  கடல் கடந்த தடுப்பு முகாம்களில்   வைக்கப்பட்டுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் எனப்பட்டது.

முந்தைய கணக்குள் படி, ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களான மனுஸ்தீவில் 675 அகதிகளும்; நவரு தீவில் 941 அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழ் அகதிகளும் உள்ளடங்குவார்கள்.

இது ஒரே முறை மட்டுமே செய்யப்படும் ஏற்பாடு என்ற ஆஸ்திரேலிய பிரதமரிடம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதை ஏற்றுக்கொள்வாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது ஒரு சமயத்தில் ஒரு ஜனாதிபதியிடம் தான் எங்களால் பேச முடியும் என்றார். ஆனால் தற்பொழுது இந்த அகதிகள் ஒப்பந்தத்தை டிரம்ப் நிராகரிக்க மாட்டார் என நம்புவதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் எரிக் ஷூல்ட்ஸ் (Eric Schultz), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் இது சம்பந்தமான கொள்கைகளை வகுப்பார் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Refugee Action Coalition அமைப்பைச் சேர்ந்த ஐன் ரிண்டோல், டிரம்ப்பின் வெற்றியை இவர்கள் எதிர்பார்க்கவில்லை, அதனால் ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும் என்பது தெளிவாக தெரிகிறது  என விமர்சித்திருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப்  அமெரிக்க ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்கயுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மீது அவர் என்ன முடிவினை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அகதிகளுக்கு எதிராகவும் புலம்பெயர்பவர்களுக்கு எதிராகவும் டொனால்ட் டிரம்ப் கடுமையான கருத்துகளை கொண்டுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...