தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள பரம்பலை வடக்கில் பரப்புவதற்காக கொண்டுவரப்பட்ட மகாவலியே ஒழிய இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீர் கொண்டுவருதற்கு எடுக்கப்பட் முயற்சி அல்ல- சாள்ஸ் நிர்மலநாதன்..

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றி வன்னிமாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கினை பிரிப்பிற்காக சிங்களமாக்களை குடியேற்ற 1988 ஆம் ஆண்டு அதன்பின்னர் 2007 ஆம் ஆண்டு வர்த்தகமானி மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுநீண்டகால நடவடிக்கை.

தற்போது தமிழர்கள் வாழ்ந்த எல்லைக்குள் அவர்கள் கால் எடுத்து வைத்துள்ளார்கள் 30 ஆண்டுகளாக இருந்தவிடயம் தற்போது இரண்டு வாரங்களுக்கு முற்பாடுதான் தமிழர் நிலங்களுக்குள் ஆக்கிரமிக்க வெளிக்கிட்டுள்ளார்கள்.

மகாவலி என்பது தமிழர்களின் அடையாளங்களை நிற்பாட்டுவதற்காக சிங்கள பரம்பலை வடக்கில் பரப்புவதற்காக கொண்டுவரப்பட்ட மகாவலியே ஒளிய இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீர் கொண்டுவருதற்கு எடுக்கப்பட் முயற்சி அல்ல

மகாவலி எல்வலயம் முல்லைத்தீவிற்குவேண்டாம் வெலிஓயா பிரதேச செயலகமும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வேண்டாம் வெலிஓயா பிரதேச செயலகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற பொழுதுதான் பல விடயங்களை நகர்த்துகின்றார்கள்.

மகாவலி,வனஇலாகா திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம்,தொல்பொருள் ஆராச்சிதிணைக்களம்,கடலோரபாதுகாப்பு திணைக்களம் போன்ற ஜந்து திணைக்களங்களால் தமிழ்மக்களுடைய எதிர்கால இருப்பிற்கு ஆபத்தான விடயம்

வடக்கில் இருக்கின்ற ஜந்து திணைக்களங்களுக்கு இருக்கின்ற தமிழ்மக்களுக்கு சொந்தமான நிலங்கள் என்பதுதான் உண்மை இதுவிடயம் தொடர்பில் நான் கதைத்துள்ளோன்

எங்களுடைய கோரிக்கை முல்லைத்தீவின் எல்லை கிராமத்தில் இருந்து சிங்கள குடியேற்றம் வேண்டாம் மகாவலியும் வேண்டாம் வெலிஓயா பிரதேச செயலகமும் முல்லைத்தீவிற்கு வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...