தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ரஷ்யா தாக்குதல்!

201606172151560014_Russia-bombing-USbacked-fighters-in-Syria-says-US-official_SECVPFசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பிட்ட கிளர்ச்சி படைகளுக்கும் அமெரிக்க அரசு நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் ரஷ்யா, சிரிய அரசு படைகளுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இதனால் சிரியாவில் அமெரிக்க கூட்டுபடைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகி வருகிறது.

இந்நிலையில் தெற்கு சிரியாவில் அமெரிக்கா ஆதரவு போராளிகள் மீது ரஷ்யா குண்டு வீசுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு துறையை சேர்ந்த அதிகாரி கூறுகையில், “ரஷ்யா விமானம், அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் அமெரிக்க படைகளோ, சிரிய படைகளோ செயல்பாட்டில் இல்லை. இந்த தாக்குதலை ரஷ்யா தான் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அவர்களின் நோக்கம் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கப்படும். வருங்காலத்தில் இது போன்று நடக்காது என்ற  உறுதி மொழியும் கோரப்படும்” என்று தெரிவித்தார்.

Comments
Loading...