Designed by Iniyas LTD
சிரியாவில் இராணுவம் விஷ வாயு தாக்குதல்!
சிரியாவில் சில பகுதிகளை புரட்சி படையினரும், சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகளும் கைப்பற்றி வைத்துள்ளனர். இவற்றை மீட்பதற்காக ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அங்குள்ள அலப்போ நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் புரட்சி படையினரிடம் உள்ளன. இந்த பகுதியை மீட்பதற்காக ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 90 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஏராளமானோர் மூச்சு திணறலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற குளோரின் வாயுக்களை போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி சிரியா ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முகமூடி அணிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
கடந்த மாதமும் இதுபோன்ற விஷவாயு தாக்குதல் நடந்ததாகவும், இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி ரஷியா வெளியிட்டுள்ள செய்தியில் சிரியா விஷவாயு தாக்குதல் நடத்தவில்லை. புரட்சிப் படையினர் தான் விஷவாயு தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறி உள்ளது