தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் ஐ எஸ் தற்கொலைத்தாக்குதல்! 150 பேர் பலி

201605240531587507_IS-blasts-in-Syria-kill-nearly-150-UN-Secretary-General-Ban_SECVPFசிரியாவில் போராளிகள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கைகளை அரசுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள டார்டஸ் நகரில் இன்று மூன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல், நாட்டின் வடபகுதியில் உள்ள ஜப்லே நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 38 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் மொத்தம் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

5 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களும், இரண்டு இடங்களில் கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனை மையமாக கொண்டு இயக்கும் மனித உரிமை கண்காணிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் 148 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். அதிபர் பஷார் அல் ஆசாத் உறுப்பினர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி-மூன் இந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...