தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அழுத்தங்கள்

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(bashar al –Assad) வுடன் அமெரிக்கா இறுதிவரை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.asath

இதன்படி தாம் மீண்டும் சிரிய ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதி முடிவுகளை எட்டவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியியல் போரின் நான்காவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மிகவும் மோசடிகள் நிறைந்த உள்ள மோதல்களை தாம் அவதானிக்க கூடியதாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரியாவில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் படி சர்வதேச சமூகத்தினர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் ஜோன் கெரி தெரிவித்தார்.

சிரியா மற்றும் அதனை அண்டிய பிராந்தியங்களில் கடந்த கால மோதல் சூழ்நிலைகள் காரணமாக சுமார் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...