தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியா அகதி முகாம் மீது வான் தாக்குதல்! 28 பேர் பலி

23வட சிரி­யாவில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் அமைந்­துள்ள பிராந்­தி­யத்­தி­லுள்ள அக­திகள் முகாம் மீது நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­த­லொன்றில் குறைந்­தது 28 பேர் பலி­யா­ன­துடன் 50 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
பலி­யா­ன­வர்­களில் சிறு­வர்­களும் பெண்­களும் உள்­ள­டங்­கு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்தத் தாக்­கு­தலில் துருக்­கிய எல்­லைக்கு அண்­மையில் இட்லிப் மாகா­ணத்­தி­லுள்ள சமதா நக­ருக்கு அரு­கி­லுள்ள கமோனா முகாம் அழி­வ­டைந்­துள்­ளது.
இந்­நி­லையில் மேற்­படி தாக்­குதல் சிரிய அல்­லது ரஷ்ய போர் விமா­னங்­களால் நடத்­தப்­பட்­ட­தாக சில அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.
சிரி­யா­வி­லான சமா­தான உடன்­ப­டிக்­கையின் நீடிப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கு ஒரு நாள் கடந்த நிலையில் இந்தத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அமெ­ரிக்கா மற்றும் ரஷ்­யாவால் கொடுக்­கப்­பட்ட கடும் அழுத்­தத்­தை­ய­டுத்து சிரிய இரா­ணு­வமும் ஜிஹா­திகள் அல்­லாத கிளர்ச்­சி­யா­ளர்­களும் அலெப்போ நகரைச் சூழ்ந்­துள்ள பிராந்­தி­யங்­களில் தற்­கா­லிக யுத்த நிறுத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இணக்கம் கண்­டி­ருந்­தனர்.
கமோனா அக­திகள் முகாமில் உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த அக­திகள் தங்­கி­யி­ருந்­தனர்.
இந்­நி­லையில் அந்த அகதி முகாம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்கு அமெ­ரிக்க வெள்ளை மாளிகை கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
மிகவும் மோச­மான நிலையில் அந்த முகாமில் தங்­கி­யி­ருந்த மக்களை இலக்கு வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஷ் ஏர்னஸ்ட் தெரிவித்தார்.

Comments
Loading...