தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவின் சிறந்த படங்களில் ராட்சசனுக்கு இரண்டாம் இடம்…

நல்ல ரசிகர்கள் ரசிக்கும் படியான கதைகளங்களை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்று நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால்  நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடையம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன்.

இந்த படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார்.

திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் பயத்தை தூண்டிவிடும் அளவிற்கு திரைக்கதையை கட்சிதமாக அமைத்திருந்தார் இயக்குனர்.

தற்போது சர்வதேச திரைப்பட விமர்சன நிறுவனமான IDMb-யானது இந்தியாவில் 2018-இன் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை ராட்சசன் படத்திற்கு அளித்துள்ளது.

Comments
Loading...