Designed by Iniyas LTD
சிறார் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
கொடுங்குற்றங்களில் ஈடுபடும் 16-18வயது வரை உள்ளவர்களை பிற குற்றவாளிகளை போல் கருதி தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் மாநிலங்களவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சிறார் வயது வரம்பை குறைக்கும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. ஏற்கனவே மக்களவையில் மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.