தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்கவுள்ளது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா உதவி வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், இதற்கான உறுதிமொழியை அளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடந்த சந்திப்பின் போது அவர், சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்க அவுஸ்ரேலியா உதவும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த தேசிய பாதுகாப்பு கல்லூரியில், நிர்வாக மற்றும் பாடத்திட்ட நிபுணத்துவ உதவிகளை வழங்கவும், இதற்கான பாடநெறிகளை வகுக்கவும், மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை இரண்டு ஆண்டுகளுக்கு அவுஸ்ரேலியா நியமிக்கும் என்றும் அவுஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

Comments
Loading...