Designed by Iniyas LTD
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி அமைக்க திட்டம்…
இது குறித்த நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் கலந்திரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மகிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏஎச்எம்.அதாவுல்லா, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
அதற்காக டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்தக் குழுவில், தயாசிறி ஜெயசேகர, திலங்க சுமதிபால, அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பொறுப்பும் குறித்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த குழு கட்சித் தலைவர்களுடன் நடத்தும் பேச்சுக்களை அடுத்து, எதிர்வரும் 16, 17ஆம் நாள்களில்,ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.