Designed by Iniyas LTD
சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க கட்டுநாயக்க வந்துள்ள இந்திய கடற்படை விமானம்
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியா- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.

இந்தியக் கடற்படையின் டோனியர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு விமானம், சிறிலங்கா கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சிகளை அளிக்கவுள்ளது.
இந்திய கடற்படை விமானம் ஒன்று சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக, கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.