Designed by Iniyas LTD
சிறிலங்கா மற்றும் இந்தியா மீனவர்கள் விடுதலை.
சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் 400 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் துறை அமைச்சின் துணை செயலாளர் ராஜ சேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீன்பிடித் துறை அமைச்சின் துணை செயலாளர் ராஜ சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 400 பேரை விடுதலை செய்ய இரு நாட்டு அரசாங்கங்களும் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இரு நாடுகளும் இதுவரை தலா 52 மீனவர்களை விடுதலை செய்துள்ளன.
இந்நிலையிலேயே இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 160 இலங்கை மீனவர்களும், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 240 தமிழக மீனவர்களும் எதிர்வரும் வாரங்களில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது இந்திய மத்திய அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.