தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறி.அரசால் விடுவிக்கப்பட்டது விவசாய காணிகளே?- சுரேஷ்பிரேமச்சந்திரன்

குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அரசாங்கத்தின் காணி விடுவிப்பு செயலணியும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.suresh

வசாவிளானில் பொது மக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள தங்களின் காணிகளை பார்வையிட பொது மக்கள் நேற்று சென்றிருந்தனர்.

எனினும் அங்கு விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தே தவிர, குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காணிகளை விடுவிக்கும் போது காணி விடுவிப்பு செயலணியும் குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, உண்மை நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்று இந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்

Comments
Loading...