Designed by Iniyas LTD
சிறுத்தையை கொன்ற 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.
கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கிளிநொச்சி நீதிமன்று பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சி அம்பாள்புரம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதைஅடுத்து குறித்த வழக்கு நேற்றைய தினம் மீள எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை நாளை வரை விளக்கமறிலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதி மன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது..
