தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுமியை கற்பழித்து கொன்ற இருவரை காவல்நிலையத்தில் வைத்து அடித்தே கொன்ற மக்கள்!

சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 12 ஆம் தேதி, இளைஞர்கள் இருவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். வழக்கை விசாரித்த போலீஸார் குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமி என்றும் பாராமல் இந்த கொடிய செயலை செய்த இளைஞர்கள் மீது கோபத்தில் இருந்த ஊர்மக்கள், காவல் நிலையத்திற்கு சென்று லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும் தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் இருவரும் இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதமக்களின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.

Comments
Loading...