தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி

பிட்காயின் திருட்டுக்காக, ஐஸ்லாந்து நாட்டில்  சிறையில் அடைக்கப்பட்டவர் கைதி ஒருவர்,  சிறையில் இருந்து  தப்பி சுவிட்சர்லாந்து சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்லாந்தில் இணையத்தின் மூலம் பிட்காயின் திருட்டில் ஈடுபட்டவரை நபர் ஒருவரை  பொலிஸார்  கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

சிறைச்சாலையின் பலத்த காவலை  மீறி குறித்த கைதி  சிறையில் இருந்து தப்பி விமானம் மூலம் சுவிட்சர்லாந்தின் ஸ்டாக்கோம் நகருக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டாக்கோம் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக ஐஸ்லாந்து பிரதமர் காத்ரின் ஜேக்கப்ஸ்டாட்டிர் தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஐஸ்லாந்து பிரதமர்  பயணித்த அதேவிமானத்தில் பிட்காயின் திருடனும் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற பிட்காயின் திருடனைப் பிடிக்க சுவிட்சர்லாந்து பொலிஸாரின்  உதவியை ஐஸ்லாந்து பொலிஸார்  நாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...