Designed by Iniyas LTD
சிறையில் உள்ள தந்தையை பார்க்க சென்ற மகன் கைது!
உதய கம்மன்பிலவுடன் சேர்ந்து சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிட்னி ஜயசிங்க என்றழைக்கப்படும் ஜயம்பதி பெரேராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் சிறைச்சாலையில் உள்ள தனது தந்தையை பார்வையிட வருகையில் இவரிடம் 50,000 ரூபாய் பணம் இருந்ததாகவும் இதனடிப்படையிலேயே இவரை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
சந்தேகநபர் சிறைச்சாலைக்குள் நுழையும் போது அவரை பரிசோதித்த சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இவரிடம் பெருந்தொகையான பணம் இருந்தமையினால் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரால் தனது தந்தைக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையிலே, இந்தப் பணத்தை மீட்டுள்ளதாக சிறைச்சாலை பணிப்பாளர் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.