தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறையில் பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி

perarivalanவேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து சிறை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன.

இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ்கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments
Loading...