Designed by Iniyas LTD
சிறையில் ரம்மி விளையாடி பொழுதைக்கழிக்கும் சசிகலா!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலாவும் அவரது அண்ணி இளவரசியும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவருக்கு, போதுமான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை, தன்னை சந்திக்க வரும் அனைவரிடமும் சசிகலா சொல்லி வருகிறார்.
வெளியில் இருந்து கொண்டு வரும் வீட்டு உணவை உள்ளே எடுத்துச் செல்ல, சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்றும் குறைபட்டுக் கொண்ட சசிகலா, சிறைக்குள், கொசுக்கள் நிறைய இருப்பதாகவும், இரவு நேரத்தில் கொசுக்கடி அதிகமாக இருப்பதால், நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்றும் சொல்லி புலம்பி இருக்கிறார்.
சமீபத்தில் அவரை, ஜெயிலுக்குள் சென்று சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம், பகல் நேரத்தில் பெரும்பாலும் பொழுது போகாமல் சிரமப்படுவதாக சொன்ன சசிகலா, அப்படிப்பட்ட நேரங்களில் நானும் அண்ணியும் சேர்ந்து ரம்மி ஆட்டம் ஆடுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தினந்தோறும் காலையில், ப்ரித்தியங்கரா தேவியை வணங்குவதாகவும் குறிப்பிட்ட சசிகலா, சாமிக்கு பூஜை செய்து வழிபட விருப்பம்; ஆனால், சிறை நிர்வாகம் அதற்கு மறுக்கிறது என்றும் வருத்தப்பட்டதாக, முன்னாள அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.