தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறையை தகர்க்க திட்டமிட்ட 97 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது!

85e31129-f80c-48d7-bb1e-efd16282a48c_S_secvpf.gifஅமெரிக்காவின் பிரபல வால் ஸ்டிரீட் பத்திரிகை நிருபரான டேனியல் பியர்ல் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்தி, கொல்லப்பட்டார்.
 
டேனியல் பியர்ல் கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற காலித் ஒமர் ஷேக் என்பவன் பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளான். இந்த சிறையை தாக்கி, தகர்த்து அவனை விடுதலை செய்ய அல்-கொய்தா தீவிரவாதிகள் ரகசியமாக திட்டம் தீட்டி வருவதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல் வந்தது.
 

இதையடுத்து, நாடு முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகளை பிடிக்க அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 97 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும், கைதானவர்களில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தளபதி பரூக் பாட்டி, லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத இயக்கத் தளபதிகள் நயீம் புகாரி மற்றும் சபிர் கான் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானத்தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களின் மீது பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு, செயல்படுத்தியவர்கள் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Comments
Loading...