Designed by Iniyas LTD
சிவகார்த்திகேயன் இருந்தால் நேரம் போவதே தெரியாது : நயன்தாரா
சிவகார்த்திகேயனும் இணைந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அவரை பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் பற்றி நயன்தாரா கூறும்போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளு தெரியாது. அந்த அளவுக்கு காமெடி செய்து கொண்டே இருப்பார். எத்தனை பக்கம் வசனம் என்றாலும் பத்தே நிமிடத்தில் அதை மனப்பாடம் செய்து நடித்து விடுவார்” என்று புகழ்ந்து இருக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.