தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிவன் கோவிலில் தீபாவளி கொண்டாடிய பெனாசிர் பூட்டோவின் மகன்!

pak_dewali_liveday_v379qa-450x254பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன், கராச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டதுடன், அங்குள்ள இந்துக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார். தீபாவளி கொண்டாடிய பெனாசிர் மகன்  பாக்., மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி அக்டோபர் 31ம் தேதி கராச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

மேலும் தாவே சிவனுக்கு பூஜை செய்து வழிபட்டார். அங்கு இஸ்லாமியர்கள் சிலர் மற்றும் இந்துக்களுடன் இணைந்து பிலாவல் தீபாவளி கொண்டாடினார்.  கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பில்வால், பாகிஸ்தானில் இஸ்லாமியர்களை போன்றே சிறுபான்மையினருக்கும் முழுமையான வழிபாட்டு சுதந்திரம் உள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் அமைதி மற்றும் ஜனநாயகத்துடன் உள்ளனர். இங்கு பயங்கரவாதத்தை வெற்றி பெற விடமாட்டோம். பாகிஸ்தான் அரசு அராஜக போராட்டக்காரர்களின் கைப்பாவையாக உள்ளது என்றார். சலாம் சுகாரி கூட்டத்தில் பிரம்மாண்டமாக தீபாவளியை கொண்டாட உள்ளதாக பிலாவல் அறிவித்திருந்தார். ஆனால் கட்டாவில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

சிவன் கோயிலில் தீபாவளியை கொண்டாடிய பிலாவல், தீபாவளியை எளிமையாக கொண்டாடி நல்லதொரு தகவலை அனைவருக்கும் தந்துள்ளனர் என இந்துக்களை வெகுவாக பாராட்டினார்.

Comments
Loading...