தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவிற்கு சென்றுள்ளார் வடகொரியா அதிபர்..

இரண்டு நாள் பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சீனா சென்றுள்ளார்.

கடந்த 4 மாதத்தில் கிம் ஜோங் உன் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

இன்றும், நாளையும் அவர் சீனாவில்  தங்கியிருப்பார் என்றும், இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை தொடர்பாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் கிம் ஜோங் உன் விவரிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க அதிபர் உடனான சந்திப்புக்குப் பின்னர் முதன் முறையாக கிம்-ஜோங்-உன் சீனா சென்றுள்ளமை  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...