தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீன தலைநகரில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

சீன தலைநகரில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா

சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

சீனாவின் வூஹானில் தொடங்கி உலகம் முழுவதையும் ஆட்டம் காண வைத்த கொரோனா இரண்டாவது அலையை பீஜிங்கில் தொடங்கியிருக்கிறது.

இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய நிலையில் 56 நாட்களுக்கு பின்னர் 11ம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஐரோப்பிய சால்மன் மீன் வகைகளால் இந்த தொற்று பரவியிருப்பதாக சீன அறிவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பீஜிங் நகர செய்தி தொடர்பாளரான சூ ஹெஜியன் கூறுகையில், பீஜிங்கில் கொரோனா தொற்று நோய் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது எங்கள் அதிகபட்ச முன்னுரிமையாக அமைந்து விட்டது.

நாங்கள் அங்கு அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். ஒவ்வொரு நிமிடமும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் 90 ஆயிரம் பேருக்கு முழுவீச்சில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மே 30ம் திகதியிலிருந்து சந்தைக்கு மட்டும் 2 லட்சம் பேர் வந்து சென்றிருப்பதால், பீஜிங் நகரம் முழுவதுமே போர்க்கால நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...