Designed by Iniyas LTD
சீன நீர்மூழ்கிக்கு கொழும்பு அனுமதி மறுத்ததில் இந்தியாவின் தலையீடு இல்லை!
சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்த விடயத்தில் இந்தியா செல்வாக்குச் செலுத்தவில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடற்படைத் தளபதியிடம், “ கடந்தமாதம் சீன நீர்மூழ்கியை கொழும்பில் தரித்து நிற்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த விவகாரத்தில் இந்தியாவில் செல்வாக்கு இருந்ததா” என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, ”இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்காவுடன் நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் தாமாகவே அதனைச் செய்தார்கள்” என்று குறிப்பிட்டார்.