Designed by Iniyas LTD
சீ.வி.விக்னேஸ்வரன் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்தார்
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கல்முனை சுபத்திரா ராமய விகாரஸ்தானத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துதல் தொடர்பாகவும் அம்பாறை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம்.சதீஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


