தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுங்கச்சாவடிகளில் வரி வசூலிப்பதை உடனே நிறுத்தக் கோரி போராட்டம்

17457965_1493571147344500_2273531902557409728_n                                                                                                                                                                                                              போராட்டம் குறித்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வே
ணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் சுங்க வரி வசூலிப்பது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.  அது போல் தமிழகம் முழுவதிலும் சுங்கச் சாவடிகளை அடியோடு அகற்ற வேண்டும். சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் வரிப் பணம் எங்கு, யாருக்குப் போய் சேர்கிறது என்று தெரியவில்லை. ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் இந்தச் சுங்கச் சாவடிகள் எங்களுக்கு வேண்டாம். அதற்கு பதிலாக  மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் இது போல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Comments
Loading...