Designed by Iniyas LTD
சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி உத்தரவு..
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது , கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இல்லாமல் செய்யும் அறிவிப்பை மைத்திரி வெளியிட்டிருந்தார்.
மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த முடிவுக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், இதனால் பதற்றம் ஏற்பட்டாது என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பியதாச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதற்கும், சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடும் உத்தரவை மைத்திரி பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், திங்கட்கிழமை நடந்த கூட்டத்துக்கும், கட்சித் தலைமையகத்தை மூடும் முடிவுக்கும் தொடர்பில்லை என்றும், கட்சி தலைமையகத்தில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிப்பதாகவே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார் என்றும், எதிர்வரும் 30ஆம் நாள் வரை கட்சித் தலைமையகம் இயங்காது எனவும், பியதாச தெரிவித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது..