Designed by Iniyas LTD
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அதற்கமைய உத்தேசிக்கப்பட்ட சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியல் அனைத்து சிறைச்சளைகளுகக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.