Designed by Iniyas LTD
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலையத்தின் உள்பகுதிகளை மத்திய தொழிற்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் நுழைவு பகுதியில் பலத்த சோதனை நடத்தப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களிலும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலைய உள்பகுதிகளிலும், வெளி பகுதிகளிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 3 மணி முதல் பார்வையாளர்கள் யாரும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.