Designed by Iniyas LTD
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 ஆம் திகதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சுதந்திர தினம் 15-ந் தேதி (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும். 
அதே போல், அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்களும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.