தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகள் விடுதலை…

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று  (04) 545 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்  விடுதலை செய்யப்படுபவர்களில் 27 பேர் வேறு வழக்குகள் தொடர்பில் மீண்டும் சிறைச்சாலைக்கு செல்ல உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று  நாடளாவிய ரீதியில் 518 பேர் விடுதலை செய்யப்பட உள்ளதாக  சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உப்புல்தெனிய  தெரிவித்துள்ளார்.

Comments
Loading...