தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுத்தமான காற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது கனடா நாட்டு நிறுவனம்!

chinaபெருமளவில் மாசுத் தொல்லையால் பாடுபடும் சீனாவுக்கு,பாட்டிலில் சுத்தமான காற்றை அடைத்து கனடாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது.

உலக அளவில் தொழில்துறையில் முன்னிலை வகித்து வரும் சீனாவில்,தொழில் வளர்ச்சியோடு சேர்த்து, அங்குள்ள காற்றும் பெரியளவில் மாசடைந்து வருகிறது. அதிகரித்து வரும் வாகன பயன்பாடு மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் சீனாவின் பரும்பாலான நகரங்களில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் நோக்கோடு சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு அங்கமாக அங்கு வாகன பயன்பாட்டை குறைக்க அரசு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியாமல் தவிக்கும் சீன மக்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தியுள்ள விடாலிட்டி ஏர் என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது, கடந்த மாதம் காற்று நிரப்பப்பட்ட 500க்கும் மேற்பட்ட கேன்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.அவை சில வாரங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.

தற்போது மீண்டும் 1000 கேன்கள் வரைக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.கேன்களின் அளவை பொறுத்து 14 முதல் 20 டொலர்கள் வரை அவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Comments
Loading...