201607270747535262_Gujarat-has-5-among-top-10-cleanest-railway-stations-Bihar_SECVPF-450x256நாட்டின் சுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் 5 ரெயில் நிலையங்கள் இடம் பிடித்து உள்ளனநாட்டின் சுத்தமான மற்றும் அசுத்தமான ரெயில் நிலையங்கள் குறித்து அண்மையில் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

நாட்டில் உள்ள 407 பெரிய ரெயில் நிலையங்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சிறந்த 10 ரெயில் நிலையங்களாக பயணிகள் தேர்வு செய்தவை வருமாறு:-

1.பியாஸ், 2.காந்திதாம், 3.வாஸ்கோடா காமா, 4.ஜாம்நகர், 5.கும்பகோணம், 6.சூரத், 7.நாசிக்ரோடு, 8.ராஜ்கோட், 9.சேலம், 10.அங்லேஷ்வர்.

நாட்டின் சுத்தமான முதல் 10 ரெயில் நிலையங்களில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும் காந்திதாம், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட், அங்லேஷ்வர் ஆகிய 5 ரெயில் நிலையங்கள் இடம் பிடித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அசுத்தமான ரெயில் நிலையங்களில் மதுபானி (பீகார்) முதலிடம் பிடித்து இருக்கிறது.